சென்னை

நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை மாற்றி உள்ளார். 

கடந்த 2 ஆம் தேதி அன்று நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி உள்ளார். அன்று அவர் கட்சி தொடங்கிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

தமிழ் ஆர்வலர்கள் பலரும் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற விஜய்யின் கட்சி பெயரில், ‘க்’ விடுபட்டுள்ளதாக சுட்டிக் காட்டினர். மேலும் நடிகர் விஜய்யின் கட்சிப் பெயரிலேயே தவறு இருப்பதாக பிற கட்சியினரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தனர்.

எனவே தனது கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று மாற்ற நடிகர் விஜய் ஒப்புதல் அளித்தார். இதையொட்டி அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.