பிரபல நடிகர் எஸ்.வி.சேகர், டாக்டர் பட்டம் அளித்து கவுரவிக்கப்பட்டார்.
புகைப்படக் கலை, வானொலி, நாடகம், திரைத்துறை, பத்திரிகை என பல துறைகளிலும் முத்திரை பதித்த எஸ்.வி. சேகருக்கு அமெரிக்க பல்கலை, கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது.
திரைப்படங்களுக்கான மத்திய தணிக்கை வாரிய உறுப்பினராகவும் செயல்பட்ட எஸ்.வி.சேகர், 2006 ல் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பாக மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
எஸ்.வி.சேகர், தணிக்கை குழுவில் மாநில தலைவராக பணியாற்றி இருக்கிறார்.
கலைவாணர் பதக்கம், கலைமாமணி பட்டம் உள்ளிட்ட பல பதக்கங்களைப் பெற்ற எஸ்.வி.சேகர், தற்போது நான்காவது முறையாக கௌரவ டாக்டர் பட்டம் பெறுகிறார்.
பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படுவதால், அமெரிக்காவின் “சர்வதேச டிரினிடி அமைதிப்பல்கலக்கழகம்” கௌரவ டாகடர் பட்டம் அளித்தது.
எம்ஜிஆர் ஜானகி கல்லூரி அரங்கில் சமீபத்தில் நடந்த இதற்கான நிகழ்வில், சர்வதேச டிரினிடி அமைதிப் பல்கலைக்கழகத்தின் சேர்மன் டாக்டர் எஸ்.அன்பு சுந்தரம், லண்டனை மையமாக வைத்து செயல்படும் தூதுவர் குழு அமைப்பின் டாக்டர் திருமதி எம் ரஜினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.