குடும்பத்துடன் அமெரிக்கா பறந்தார் நடிகர் ரஜினிகாந்த்…. வீடியோ

Must read

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்த “அண்ணாத்த” திரைப்படம் முழுமையாக முடிந்த நிலையில், வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது. மேலும் சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிகிச்சைக்காக  ரஜினிகாந்த் இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில்  நடிகர் ரஜினிகாந்த்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இதன்பின்னர், படப்பிடிப்புகளில் தீவிர கவனம் செலுத்தி வந்தார்.  இடையில், கடந்த ஆண்டு  (2020) டிசம்பர் மாதம் ஹைதராபாதில் அண்யாத்த படப்பிடிப்பின்போது, ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அவருக்கு கொரோனா இல்லை என்றும், ரத்த அழுத்தத்தில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது என்று கூறி  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து, அரசியலுக்கு வருவதாக மக்களை ஏமாற்றி வந்த அறிவிப்புக்கு முற்றுபுள்ளி வைத்தார். அரசியலை விட்டே ஓடினார். தொடர்ந்து கல்லா கட்டுவதிலேயே கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டார். தற்போது கொரோனா அச்சுறுத்தல் உள்ளதால், மத்தியஅரசு மற்றும் அமெரிக்க அரசின் அனுமதி கோரியிருந்தார். அவருக்கு  வெளிநாடு செல்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார்.

இதற்கிடையில், ரஜினியின் மருமகன் அமெரிக்காவில் ஹாலிவுட் படம் ஒன்றில் தனுஷ் நடித்து வருகிறார். இதால் அவரது குடும்பத்தினர் கடந்த 3 மாதங்களாக அமெரிக்காவில்தான்  முகாமிட்டு உள்ளனர்.  இதையடுத்து ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.

More articles

Latest article