பிரகாஷ் ராஜ் எப்படிபட்ட குணசித்திர நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிபட்ட இவர் ஒரு சமுதாய கருத்துள்ள படத்துக்காக சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார். ஐசரி கணேஷ் மற்றும் இயக்குநர் விஜய் இணைந்து தயாரித்த திரைப்படம் “சில சமயங்களில்” இந்த திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஷ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் நடிப்பில் திரைக்கு வர தயாராகவுள்ளது
இந்த திரைப்படத்தின் கதை ஒரு நடுத்தர வயதை தாண்டிய ஆண் தனக்கு எய்ட்ஸ் உள்ளதா எனபதை தெரிந்துக்கொள்ள மருத்துவமனைக்கு காலை 9 மணிக்கு ரத்தம் கொடுக்கின்றான், ரிசல்ட்டை தெரிந்துக்கொள்ள மாலை 5மணிக்கு வர சொல்லவும் இடைப்பட்ட நேரத்தில் அவனின் மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறது என்பது தான் இந்த திரைப்படத்தின் திரைக்கதை.
இப்படிப்பட்ட சமுதாய கருத்துள்ள இந்த திரைப்படத்தில் நான் நடித்ததே பெருமை ஆகையால் எனக்கு இந்த படத்தில் நடித்ததுக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறியுள்ளாராம்.
வாழ்த்துக்கள் சார்…