கோடிட்ட இடங்களை நிரப்புக – வித்தியாசமான அழைப்பிதழ்..!

Must read

ntlrg_20161129125524335988
நடிகர் பார்த்திபனின் இன்னொரு பெயர் வித்தியாசமோ என்று தான் கேட்க தோன்றுகின்றது, நடிகர் பார்திபனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று பல வேலைகளை செய்து விரைவில் வெள்ளித்திரையில் ஜொலிக்க வரும் திரைப்படம் தான் கோடிட்ட இடங்களை நிரப்புக.
இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது இதனால் அவர் அனைவருக்கும் அந்த விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பிதழ் கொடுத்தார். அதை திறந்தால் நமக்கு ஆச்சரியம் என்னடா இது பார்திபன் படமா இல்லை பாக்கியராஜ் படமா என்று.
15282066_1025928437551366_249155004_n 15239258_1025928460884697_1869690346_n15218708_1025928554218021_1984420114_n
அந்த பத்திரிக்கையை திறந்தால் குரு வணக்கம் என்று சொல்லி திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜுக்கு சமர்பணம் என்று இருந்தது அடுத்து ஒரு பேப்பர் இருந்தது அதை பார்த்தால் எதோ பத்தாம் வகுப்பு மாணவர்களின் கேள்வி தால் போலயிருந்தது அதில் இருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலை எழுதி இசை வெளியீட்டு விழாவில் வைக்கப்படும் பெட்டியில் போடவும் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு பரிசு என்று இருந்தது.
அட பார்த்திபா உன் தமிழ் ஆர்வத்துக்கு அளவே இல்லையா…?
இந்த வித்தியாசமான முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்….

More articles

Latest article