சென்னை,
திமுகவில் இருந்து விலகுவதாக அதிமுக பேச்சாளர் நடிகர் ஆனந்தராஜ் அறிவித்து உள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவை வழி நடத்தி செல்ல சரியான தலைவர்கள் இல்லாத நிலையில் சசிகலா அந்த பொறுப்புக்கு வர முயற்சித்து வருகிறார்.
இது கட்சி தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. மேலும் கட்சி தலைவர்கள் சசிகலாவை சந்தித்து, கட்சி தலைமையேற்க அழைத்து வருவதும் கட்சிக்குள் குழப்பத்தை உருவாகி உள்ளது.
இதன் காரணமாக அதிமுகவில் உள்ள ஒருசில பிரபலமான மூத்த தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள்  சிலர் ஒதுங்கியே உள்ளனர்.
இதற்கிடையில் இன்று திடீரென  அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரான ஆனந்தராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.
ரெய்டுக்கு உள்ளான முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி நேற்று பேட்டி  கொடுத்ததற்கு கண்டனம் தெரிவித்தும், அதிமுகவின் மூத்த தலைவர்களான பொன்னையன், செங்கோட்டையன் உள்ளிட்டோரின் செயல்பாடும், பேச்சு வருத்தம் அளிப்பதாகவும், தற்போதைய சூழ்நிலையில் தான் கட்சியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.