சென்னை:

ங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வருவதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள் ளநிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ள 500 மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் உதயகுமார் கூறி உள்ளார்.

வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் குறித்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ள நிலையில், அமைச்சர் உதயகுமாரும் மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,

இந்திய வானிலை அறிக்கைப்படி, கன்னியாகுமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது மேற்கு வடமேற்கு நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக , கடந்த 2 நாட்களுக்கு முன்பே இது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தகவல் தெரிவித்து முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர்,

கன்னியாகுமரி கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்க  553 படகுகள் கடலுக்குள் சென்று இருந்ததாகவும், இவற்றில், 502 படகுகள் கரைக்கு திரும்பி விட்டன,  இன்னும் 51 படகுகள் கரை திரும்ப வேண்டும் என்றும கூறினார்.

இந்த 51 படகுகளில் சுமார் 500 மீனவர்கள் இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்த படகுகளில் 30 படகுகள் கர்நாடகா கடல் பகுதியிலும், லட்சத்தீவு பகுதியில் 16 படகுகளும், கோவா பகுதியில் 5 படகுகளும் தத்தளிப்பதாக தெரிய வந்துள்ளது என்றும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் திசையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும்,  தற்போதைய நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.