கேரளாவில் கூட்டணியுடன் களமிறங்கும் ஆம்ஆத்மி கட்சி! கெஜ்ரிவால் மாடல் தேவையில்லை என சிபிஎம் விமர்சனம்….

Must read

திருவனந்தபுரம்: கேரளாவில் கூட்டணியுடன்  ஆம்ஆத்மி கட்சி களமிறங்கி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிபிஎம் மத்தியகுழு, கேரளாவுக்கு கெஜ்ரிவால் மாடல் தேவையில்லை என விமர்சித்து உள்ளது.

டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி கட்சி, கேரளாவிலும் கால்பதிக்க முயற்சித்து வருகிறது. தற்போது அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அங்க டுவென்டி டுவென்டி கட்சியுடன் ஆம்ஆத்மி கட்சி கூட்டணி வைத்து, அரசியல் பணியை தொடங்கி உள்ளது. கேரளாவில், ஆடை தயாரிப்பு நிறுவனமான கைடெக்ஸ் (KITEX) குழுமத்தின் சி.எஸ்.ஆர் பிரிவான கேரளாவைத் தளமாக்க்கொண்ட டிவெண்டி20 கட்சி ஆம்ஆத்மி கட்சி கூட்டணி வைத்துள்ளதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கூறிய டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் , கேரளாவில்,  “குற்றச் செயல்கள் மற்றும் கலவரங்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் அல்லது மக்களின் நலனுக்காக செயல்படும் ஆம் ஆத்மி மற்றும் டுவென்டி 20 போன்ற நேர்மையான கட்சிகள் உள்ளன. கேரள மக்கள் தேர்வு செய்ய இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன என்று கூறினார்.

தற்போது அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) – இதற்கு முன்பு இருந்ததைவிட முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையாக உள்ளது. அதுபோல, கேரளாவில் உள்ள மற்ற கூட்டணியான, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அதன் முக்கிய கூட்டணி கட்சியான பாரத் தர்ம ஜன சேனாவுடன் ஒரு இறுக்கமான உறவைப் பகிர்ந்துகொள்வதால், அக்கட்சி கூட்டணியில் இருந்து முழுமையாக வெளியேறவில்லை.

2015 இல் உள்ளாட்சி அரசியலில் களமிறங்கிய கீழக்கம்பலம் உட்பட கேரளாவில் உள்ள நான்கு கிராம பஞ்சாயத்துகளை டிவெண்டி20 அமைப்பு நிர்வகிக்கிறது. டிவெண்டி20 அமைப்பு 2021 ஆம் ஆண்டில் எர்ணாகுளத்தில் ஒரு சில தொகுதிகளில் போட்டியிட்டு சட்டமன்றத் தேர்தலில் முதலில் போட்டியிட்டது. ஆனால், பின்னர், சிபிஎம்-இன் பி டீம்மா தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது என்று குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதால், இந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் அமைப்பு அது போட்டியிட்ட எட்டு தொகுதிகளில் 6 தொகுதிகளில் 3வது இடத்தைப் பிடித்தது. பாஜகவை நான்காவது இடத்திற்கு தள்ளியது.

கைடெக்ஸ் குழுமத்தின் சி.எச்.ஆர் செயல்பாடுகளின் நற்பெயரின் அடிப்படையில், இந்த அணி ஓரளவு கௌரமான வாக்குகளைப் பெற முடிந்தது. அரசியல் சார்பற்ற வாக்காளர்கள் மற்றும் பாரம்பரிய அரசியல் கட்சிகளைத் தாண்டி பார்க்க விரும்பும் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினருக்கு கவர்ச்சிகரமான தேர்வாக இந்த அமைப்பு இருப்பதை உணர்ந்தனர்.‘

ஆம் ஆத்மி கேரளாவுக்குள் நுழைய முயற்சிக்கும் போது டிவெண்டி20 முதுகில் தூக்கி செல்ல வேண்டும். ஆனால், மக்கள் நலக் கூட்டணி எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்னவென்றால், குறைந்தபட்சம் இப்போதைக்கு, அதன் அடிப்படையான டுவென்டி-20, எர்ணாகுளம் மாவட்டத்திலும், அதுவும் ஒரு சில பஞ்சாயத்துகளில் மட்டுமே உள்ளது.

தற்போதைக்கு, டிவெண்டி20 – ஆம் ஆத்மி கட்சி இணைந்து மே 31-ஆம் தேதி நடைபெறவுள்ள திருக்காக்கரா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அதற்குப் பதிலாக 2024 பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துவது என்றும் டிவெண்டி20 – ஆம் ஆத்மி கூட்டணி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்த கருத்து தெரிவித்துள்ள சிபிஎம் மத்திய குழு, கேரளாவிற்கு கெஜ்ரிவால் மாடல் தேவையில்லை என்று கூறியதுடன், டுவென்டி டுவென்டி போன்ற கார்ப்பரேட் கட்சிகளுடன் கை கோர்ப்பது, அவற்றின் நிதியைக் கொண்டு கேரளாவில் மாற்றம் கொண்டு வருவது போன்றை தேவையற்றது. தயது செய்து உங்கள் அரசாங்கம் டெல்லியில் எப்படி மாற்றத்தை கொண்டு வருவது என்பதை கேரளாவிடம் இருந்து கற்றக்கொள்ளுங்கள். நிங்கள் இயற்றிய தொழிலாளர் சட்ட மீறல்களை அகற்றுவதன் மூலம் தொடங்குங்கள் என்று விமர்சித்துள்ளது.

More articles

Latest article