aakash 2 make in india Akash-rocket1
இந்தியாவை பெருமிதப்படுத்தும் மற்றொரு “மேக் இன் இந்தியா” தயாரிப்பு வெளிவர ஆயத்தமாக உள்ளது. இந்தியாவின் வெள்ளை யானை எனக் கூறப்படும் டிஆர்டிஒவால் 32 ஆண்டுகளாக 1000 கோடிக்கும் மேலே செலவு செய்து இந்தியாவை வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை பயனற்றது என இந்திய இராணுவத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக ஒரு பொருத்தமான மாற்று ஏவுகணையை வெளிநாட்டிலிருந்து வாங்குவதற்காக, இராணுவம் இதனை “இராணுவத்தின் தேவையைக் குறிப்பிட்டக் காலக் கட்டத்தில் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை” என்று கூறியுள்ளது.
இந்நடவடிக்கை இந்தியாவின் ஏவுகணை பாதுகாப்பு பாதிப்பை மட்டும் அம்பலப்படுத்தாமல் பிரதமர் நரேந்திர மோடியின் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் பலவீனத்தையும் வெளிப்படுத்துகிறது. ஆகாஷ் ஏவுகணையை எதிர்க்கும் விதமாக, சமீபத்தில் பாகிஸ்தான், சீனாவிடமுள்ள HQ-7 ஐ போல, FM-90 எனும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை PLA சீனாவிடமிருந்து பெற்று அதனுடைய இராணுவத்தில் சேர்த்தது.
இது இந்திய ஏவுகணைத் திட்டத்தின் தலைவிதியை மட்டுமல்லாது 70,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு டஜனுக்கும் மேலான ஏவுகணைகளின் திறனையும் வெளிக்காட்டுகிறது. மேலும் இது நாட்டின் முதன்மைப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஆகாஷ் ஏவுகணை என்பது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு சூப்பர்சானிக் குறுகிய அளவிலான மேற்பரப்பு காற்று ஏவுகணைத அதாவது short-range surface-to-air missile(SRSAM) திட்டம். இதில் அதிகபட்சமாக 25 கி.மீ. தூரமும் 20 கி.மீ. உயரமும் பறந்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா ஆகாய வாகனங்கள் போன்ற வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனுடையது.மேலும் அனைத்து விதமான வானிலையிலும் ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் திறனுடையது.
இராணுவத் தலைமையகம் அதன் இரண்டு படைப்பிரிவுகளை உயர்த்துவதற்காகக் கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 விமானப் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறுகிய தூர ஏவுகணைகளை வழங்குவதற்காக தொழில்நுட்ப மதிப்பீட்டின் அடிப்படையில், ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளிலிருந்து மூன்று நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இராணுவத் தலைமையகம் “தி சண்டே ஸ்டாண்டர்ட்” க்கு பதிலளித்துக் கூறுகையில்,”ஐந்து ஆண்டுகளாக உருவாக்கிய ஆகாஷ் ஏவுகணை அமைப்பைவிட targeted short-range surface-to-air missile(SRSAM) அமைப்பு தொழில் நுட்பத்திலும் செயல்முறையிலும் மேன்மையானது.” மேலும் targeted SRSAM திட்டத்தின் செலவு ஆகாஷ் ஏவுகணை திட்டத்தில் 70% ஆகும்.
மே 2015, ஒப்பந்தத்தில், இராணுவத் தலைமை அதிகாரி தல்பீர் சிங் சுஹாக் ஆகாஷ் ஏவுகணையைப் பாராட்டியிருந்தார். அதைப் பற்றி அவர் கூறுகையில், “உள்நாட்டின் கைத்திறன் கொண்டு செய்யப்பட்ட ஆகாஷ் எனும் வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை இந்திய இராணுவத்தில் சேர்ப்பதென்பது நாட்டிற்கே பெருமையான விஷயம். நம் நாட்டின் சொத்துக்களுக்கு பாதிப்பு வராமல் பாதுகாக்கும் வல்லமை பொருந்தியது இந்த ஆகாஷ் ஏவுகணை.
1984 ல் டிஆர்டிஒவால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் ஐந்து அடிப்படை ஏவுகணைகளில் ஒன்று இந்த ஆகாஷ் ஏவுகணை. ஆரம்பத்தில், 19,500 கோடி ரூபாய் செலவில் ஆறு துப்பாக்கி சூடு பேட்டரிகள் கொண்ட இரண்டு ஆகாஷ் படைப்பிரிவுகளை உத்தரவிட்டிருந்தது இந்திய இராணுவம். ஆனால் ஒரு வருடத்திற்குள்ளேயே ஆகாஷ் ஏவுகணையைப் பற்றிய அதன் கருத்தை மாற்றிக்கொண்டுவிட்டது. இராணுவத்தின் இந்தக் கூற்றைப் பற்றி டீஆர்டீஓவிடம் கேட்டபோது கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.