சிரோன்மனி அகாலிதல் தலைவர் சிம்ரஞ்சித் சிங் மான்
சிரோன்மனி அகாலிதல் தலைவர் சிம்ரஞ்சித் சிங் மான்

“பெண்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் சீக்கியர்கள் அவர்களை வழிபட மாட்டார்கள். எனவே பாரத மாதா கி ஜே எனவும் சொல்லமாட்டோம்” என சிரோன்மனி அகாலிதல் தலைவர் சிம்ரஞ்சித் சிங் மான் தெரிவித்துள்ளார்.
சீக்கியர்களுக்கு  காலிஸ்தான் என்ற தனி நாடு கோரிக்கையை முன்னெடுத்துச் செல்லும் தலைவர்களில் சிரோன்மனி அகாலிதல் தலைவர் சிம்ரஞ்சித் சிங் மான் முக்கியமானவர்.இவரின் தீவிரவாதப் பேச்சு பலமுறை கலவரங்களுக்கு வித்திட்டுள்ளது.
பாரத மாதா கி ஜே விவகாரம் ஒவ்வொரு நாளும் பிரச்சினை ஆகி வருகிறது. இதுபற்றி சிம்ரஞ்சித் சிங் மான் கூறிய்தாவது:‍‍
பாரத மாதா கி ஜே என்று சொன்னால்தான் தேசபக்தி இருப்பதாக பாஜக சொல்கிறது. அப்படிச் சொல்லாவிட்டால் அது தேசத்துரோகம் என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்? சீக்கியர்கள் வந்தே மாதரம் என்று கூட சொல்லமாட்டார்கள். சீக்கியர்கள் ‘ வாஹேகுரு ஜி கா கல்சா , வாஹேகுரு ஜி கி ஃபதே ‘ என்றுதான் சொல்ல வேண்டும். அதைத்தான் சொல்கிறார்கள்.. ஏனைய மதங்களின்மீது  இந்துக்களின் உணர்வுகளை திணிக்கக் கூடாது “என்று  அவர் தெரிவித்தார்.