டில்லி

ண்கள் மட்டுமே பணியாற்றி வந்த விமான தீயணைப்புத் துறையில் ஒரு பெண் தீயணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்

விமான நிலையங்களில் தீயணைப்புப் பிரிவில் தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளன.   அந்த இடங்களில் பெண்களையும் பணியில் அமர்த்த விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்தனர்.    ஆண்களுக்கான தீயணைப்பு பணியாளர்களுக்கான உடல்தகுதி 1.6 மீட்டர் உயரமும் 50 கிலோ எடையும் குறைந்தபட்சம் இருக்க வேண்டும் என உள்ளது.   பெண்களுக்கு குறைந்த பட்சம் 40 கிலோ எடை இருக்க வேண்டும் எனவும் உயரமும் அதே போல் குறைக்கபட்டும் நிர்ணயிக்கப்பட்டது.

தற்போது கொல்கத்தாவை சேர்ந்த தானியா சன்யால் என்னும் பெண் தீயணைப்புத் துறையில் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.    இத்துறையில் பணியாற்ற சேர்க்கப்பட்டுள்ள முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத் தக்கது.   தாவரவியலில் பட்டமேற்படிப்பை முடித்துள்ள தானியா கிழக்கு பகுதியில் உள்ள விமானநிலையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளார்.

கொல்கத்தா, பாட்னா, புவனேஸ்வர், ராய்ப்புர், கயா, ராஞ்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் ஆறு மாதப் பயிற்சி முடிந்த பின் இந்த விமான நிலையங்களில் ஒன்றில் அவர் பணி புரிவார் என அறிவிக்கப்படுள்ளது.    இது குறித்து, தானியா, “எனக்கு இந்தப் பணி அளிக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாவவும் உள்ளது.   நான் இந்தத் துறையில் பணி புரிய விரும்பியதற்கு ஊக்கம் அளித்த எனது குடும்பத்தினருக்கும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”  எனக் கூறி உள்ளார்.