டில்லி:

த்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள நடப்பு நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டு உள்ளது.

வருவமான வரி வரம்பை மாற்றாத நிலையில், வருமான வரி தாக்கல் செய்ய உபயோகப்படுத்தப் பட்டு வரும் பான் கார்டுக்கு பதில் ஆதார் கார்டை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யலாம் என்று அறிவித்து உள்ளது.

வருமான வரி கணக்கு உட்பட அனைத்துக்கும் பான் கார்டுக்குப் பதிலாக, ஆதார் எண்ணை பயன்படுத்தலாம் என்று நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேலும், ‘ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி பிடித்தம் இல்லை.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பான் கார்டுக்கு பதிலாக ஆதார் எண்ணை பயன்படுத்தலாம்.

ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக எடுத்தால், 2 சதவிகித வரி விதிக்கப்படும்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது.

ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர் களுக்கு 7 சதவிகிதம் வரி விதிக்கப்படும்” என்று அறிவித்தார்.

ஜிடிபியில் இந்தியாவின் கடன் அளவு 5 விழுக்காட்டிற்கும் கீழாக குறைந்துள்ளது
வருமான வரி தாக்கல் செய்ய இனி பான் கார்டு இன்றி ஆதார் அட்டை மூலமாகவே செலுத்த முடியும்.

வருமான வரி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டியதில்லை. ஆன்லைன் மூலமாகவே பதிலளிக்க முடியும்.

வங்கிகளின் வாராக்கடன் குறைந்துள்ளது. மோசமான நிலையிலிருந்த ஆறு பொதுத்துறை வங்கிகள் மீட்கப்பட்டுள்ளன

இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படும் என்றும்  பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.