சென்னை:  உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பக்கவாதம்  வந்துவிடும் அபாயம் இருப்பதாக,. அவரது ஜாமின் மனுமீதான விசாரணை யின்போது, செந்தில் பாலாஜி வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதம் செய்தார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில்  அமலாக்கத்துறை அதிகாரிகாளல் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, கு 10ஆவது முறையாக வரும் புதன்கிழமை வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பி  ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் பெலா திரிவேதி மற்றும் சதீஷ் சந்திரசர்மா ஆகியோர் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு என கூறி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சோதிக்கப்பட்ட நிலையில், பின்னர்   ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு  கணையத்தில் கொழுப்பு கட்டி இருக்கிறது. மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்தம் கட்டியுள்ளது. இதனால் அவரது கால் மரத்து போகிறது என்றும் முதுகு தண்டில் வலி ஏற்படுகிறது என்றும் மருத்துவர்கள் கதை சொல்லி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்னான் அட்டர்னி ஜெனரல், முகுல் ரோத்தகி,  செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கெஞசியதுடன்,  அவருடைய மருத்துவ அறிக்கைகளை இணைத்துள்ளோம் அதை   நீதிமன்றமும் அமலாக்கத் துறையும் ஆய்வு செய்து ஜாமின் வழங்க வேண்டும் என கோரினார். மேலும், செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கையில், அவருக்கு  பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறி ஜாமின் கோரினார்.