ஏ.ஆர். ரகுமான் மூத்த மகள் கதீஜா-வின் திருமண நிச்சயதார்த்தம் டிசம்பர் 29 ம் தேதி நடைபெற்றது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

https://www.instagram.com/p/CYOR58Clp6a/

நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் நேற்று பதிவிட்டுள்ள கதீஜா, தனக்கும் சவுண்ட் என்ஜினீயர் ரியாஸ்தீன் ஷைக் மொஹமத் என்பவருக்கும் எனது பிறந்தநாளான டிசம்பர் 29 அன்று நிச்சயதார்த்தம் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

திருமண தேதி குறித்து அதில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

ஏ.ஆர். ரகுமான், அமித் த்ரிவேதி ஆகியோரின் மேடை கச்சேரிகளுக்கு சவுண்ட் என்ஜினீயராக பணிபுரிந்துள்ளார் ரியாஸ்தீன் ஷைக் மொஹமத்.