சென்னை

டிகர் விஷாலுக்குச் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகரான விஷால் ஜிஎஸ்டி வரியைச் செலுத்தாதது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.   இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் விஷாலுக்குச் சம்மன் அனுப்பி அவர் வரவில்லை.  எனவே தொடர்ந்து நீதிமன்றம் அவருக்குச் சம்மன் அனுப்பியது.

ஆயினும் அவர் இதுவரை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார்.  இந்த வழக்கு விசாரணையின் போது எழும்பூர் நீதிமன்ற நீதிபதி இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   விஷால் சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் உள்ளதற்காக எழும்பூர் நீதிமன்றம் ரூ.500 அபராதம் விதித்துள்ளது.

விஷால் வேண்டுமென்றே விசாரணையில் ஆஜராகாமல் உள்ளதாகவும் இது சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப வேண்டும் என்னும் அவரது உள்நோக்கத்தைக் காட்டுவதாகவும் நீதிபதி தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.