மதுரை: தமிழகத்தில் இறந்தோர் இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், மறைந்தோர் இறுதி ஊர்வலங்களின் போது ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக சென்னை போன்ற நகர்ப்புறங்களில் நடைபெறும் இறுதி ஊர்வலங்களின்போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இறுதி ஊர்வலங்களில் கலந்துகொண்டு ஆடும் சிலரின் அலப்பறை மற்றும் இறுதி ஊர்வலத்தில் போது, பிணத்துடன் எடுத்துசசெல்லுப்படும், பூக்களை பொதுமக்கள் மீது வீசி எறிவது போன்றவற்றால் அவ்வப்போது சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இறுதி ஊர்வலத்தில் கடைபிடிக்க வேண்டியது குறித்து, தமிழ்நாடு காவல்துறை (DGP) ஏற்கனவே சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், 2025ம் ஆண்டு மார்ச் 5ந்தேதி அன்று கல்லூரி மாணவிகள் 25 பேர் பயணம் செய்த கல்லூரிப்பேருந்துமீது, இறுதி ஊர்வலத்தில் சென்றவர்கள் சில, பூக்களை வீசி எறிந்ததுடன்,போதையில் பேருந்தை நிறுத்தி மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், அந்த பேருந்தின் ஓட்டுநரையும் தாக்கி பேருந்தை சேதப்படுத்தினர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு போலீஸார் சங்கர், அஜித்குமார், சந்திரபோஸ் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைது, சம்பந்தப்பட்ட 3 பேரும், முன்ஜாமீன் கோரி மூவரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் , மது போதையில் இருந்தவர்கள் மாணவிகளிடம் நடந்துகொண்ட செயலை சாதாரணமாகக்கருத முடியாது.
இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பது ஒரு சமூக மற்றும் கலாச்சார நடைமுறையாக இருந்தாலும், அது பொது பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கவோ, வன்முறை அல்லது ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடவோ காரணமாக இருக்கக்கூடாது. அதனால், புகார் குறித்து, மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். அவர்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று உத்தரவிட்டார்.
மேலும், கடலூரில் இறுதி ஊர்வலத்தில் சென்றவர்கள் வீசிய மாலையால் பொறியாளர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியவர், இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டத்தை இயற்றுவது குறித்து ஆராய தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்படுகிறது.
இது தொடர்பாக ஜூலை 31-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை 31-க்கு தள்ளிவைக்கப்படுகிறது.
[youtube-feed feed=1]