கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ஜென்டில்மேன்-2 இந்தப் படத்தை இயக்கப்போவது யார் என்ற அறிவிப்பை இன்று அவர் வெளியிட்டார்.

அர்ஜுன், மதுபாலா நடிப்பில் 1993 ம் ஆண்டு வெளியான படம் ஜென்டில்மேன். கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில் ஷங்கர் இயக்குனராக அறிமுகமான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

தற்போது ஜென்டில்மேன்-2 என்ற பெயரில் ஜென்டில்மேன் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்க இருக்கும் இந்தப் படத்தை கோகுல் கிருஷ்ணா இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நானி, வாணி கபூர், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் 2014 ம் ஆண்டு வெளியான மெகா ஹிட் திரைப்படம் ஆஹா கல்யாணம் படத்தை கோகுல் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

ஜென்டில்மேன்-2 படத்தின் நாயகியாக நயன்தாரா சக்ரவர்த்தி நடிக்க இருப்பதாகவும், இசையமைப்பாளர் கீரவாணி இந்தப் படத்துக்கு இசையமைக்க இருப்பதாகவும் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் கதாநாயகன் மற்றும் பிற கலைஞர்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.