சென்னை

சூர்யா நடிப்பில் உருவான கஜினி திரைப்படம் மீண்டும் கேரளாவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து சூர்யாவின் 44- வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2005 ஆம் வருடம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் கஜினி. இந்தப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நாயகிகளாக அசின், நயன்தாரா ஆகியோர் நடித்து இருந்தனர்.

பிறகு இந்த படம் இந்தியில் அமீர்கான் நடிக்க ரீமேக் ஆகி அங்கும் வசூலில் சக்கைப்போடு போட்டது. கேரளாவில் கஜினி திரைப்படம் ரீ-ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.