ஹர்திக் பாண்டியா தனது காதல் மனைவியை பிரிய ரூ. 115 கோடி தரப்போவதாக சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் செர்பியா நாட்டைச் சேர்ந்த நடிகையும் மாடல் அழகியுமான நடாஷா ஸ்டான்கோவிச் திருமணம் 2020 மே மாதம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே நடைபெற்ற இந்த திருமணத்திற்குப் பிறகு அதே ஆண்டு ஜூலை மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.

2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உதய்பூரில் இந்து மற்றும் கிருத்தவ முறைப்படி தங்கள் திருமணத்தை விமரிசையாக நடத்தி விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்துக்குப் பிறகு இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் தங்கள் சமூக வலைதளத்தில் எந்த ஒரு பதிவும் போடாமல் இருந்தனர்.

மார்ச் 4ம் தேதி நடாஷா பிறந்தநாளுக்கு கூட ஹர்திக் பாண்டியா சமூக வலைதளத்தில் வாழ்த்து கூறாமல் இருந்தார்.

இதனால் இருவரும் பிரியப்போவதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் நடாஷா-வை விவாகரத்து செய்ய ஹர்திக் பாண்டியா முடிவெடுத்துள்ளதாகவும் அதற்காக தனது சொத்தில் 70% நடாஷாவுக்கு தர முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா ஒவ்வொரு மாதமும் 1.2 கோடி ரூபாய் சம்பாதிப்பதாக ஸ்போர்ட்ஸ் கிரீடா இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் மூலம் பெரும் வருமானத்தை ஈட்டும் ஹர்திக் பாண்டியா பிசிசிஐயின் வருடாந்திர ஒப்பந்தத்தின் மூலம் ரூ.5 கோடி பெறுகிறார்.

2022 ஆம் ஆண்டு குஜராத்தின் கேப்டனாக ஹர்திக் பொறுப்பேற்ற போது, ​​அவரை சுமார் 15 கோடி ரூபாய்க்கு இந்த அணி வாங்கியது. 2024-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தபோதும் அவருக்கு ரூ.15 கோடி வழங்கப்பட்டது.

இது தவிர, விளம்பரங்கள் மூலம் சுமார் 55-60 லட்சம் சம்பாதிக்கிறார். மும்பையில் 30 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ள ஹர்திக் பாண்டியாவுக்கு வடோதரா-வில் ஒரு பெண்ட்ஹவுஸ் உள்ளது.

இவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ. 165 கோடி என்று கூறப்படுகிறது. இதில் அவர் 70% சொத்துக்களை நடாஷா-வுக்கு தர இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் நடாஷாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு ஹர்திக் பாண்டியாவின் நிலை மோசமடையக்கூடும் என்று அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.