இன்னொரு இயக்குநர் படத்துக்குப் பெயர் வைத்த டைரக்டர்

ட இயக்குநர்கள் ரொம்பவே சென்சிட்டிவானவர்கள். படத்தின் ஒவ்வொரு காட்சியும் தனது கற்பனைக்கு ஏற்பவே அமைய வேண்டும் என்று நினைப்பார்கள்.

அதுவும் படத்தின் பெயரை தனது விருப்பத்துக்கு வைக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். ஆனால் இயக்குநர் பிரியதர்ஷன் படத்துக்கு டைரக்டர் மகேந்திரன் பெயர் வைத்திருக்கிறார்.

ஆம்.. இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தில் நடித்து வருகிறார். நாயகிகளாக நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது.

படப்பிடிப்பு தென்காசியிலும், சில பகுதிகள் துபாயிலும் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் மலையாளத்தில் வெளியான ‘மகிஷினிதே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக் ஆகும். சமுத்திரக்கனி வசனம் எழுதியுள்ளார்.

பிரபல டைரக்டர் மகேந்திரன் ஸ்கரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மகேந்திரன் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கும் பிரியதர்ஷன், பட இயக்கத்தில் தனக்கு உதவும்படி அவரிடம் விரும்பிக் கேட்டிருக்கிறார். ஆனால் மகேந்திரனோ, “படத்தை உன் விருப்பத்துக்கு எடு. அதுதான் சரி” என்று சொல்லி மறுத்துவிட்டார்.

படத்தின் பெயரையாவது நீங்கள் வையுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். டக் என்று ‘நிமிர்’ என டைட்டில் வைத்தாராம் மகேந்திரன். இந்த தகவலை பிரியதர்ஷனே பெருமையுடன் சொல்லியிருக்கிறார்.
English Summary
a Director naming for another director's film