அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது…

விவேகம் படம் வெளியாகி ஓடி முடிந்துவிட்ட நிலையில், அஜீத் ரசிகர்கள் எதிர்பார்த்திருப்பது.. அஜீத்தின் அடுத்தபடத்தை யார் இயக்கப்போவது என்பதைப் பற்றித்தான்.

இது குறித்து கடந்த சில நாட்களாகவே கோடம்பாக்கத்தில் பல்வேறு விதமான தகவல்கள் உலவிக்கொண்டிருந்தன. ஆனால் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பார் ஐஸ்வர்யா, அஜித்தின் அடுத்த படத்தை தாங்கள் தயாரிக்கப்போவதாகவும், “விவேகம்” படத்தை இயக்கிய சிவாதான் அந்த படத்தையும் இயக்கப்போகிறார்” என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
who is the director for Ajith's next movie