டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்த ஜெயம் ரவியின் மகனுக்கு பிரபலமான எடிசன் விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக குழந்தை நட்சத்திரத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடித்து வெளியான ‘டிக் டிக் டிக்’ படத்தில், நடிகர் ஜெயம் ரவி மேஜிக் மேனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடன் அவரது மகன் ஆரவ் குழந்தை நட்சத்திரமாக முதன்முறையாக  அறிமுகமாகி கலக்கி இருந்தார்.

இந்த படத்தில் வெளியாக துருவா பாடலும் வெரும் வெற்றியடைந்து பட்டித்தொட்டிகளிலும் பிரபலமானது.

இந்த நிலையில் , இந்த படத்திற்காக ஜெயம் ரவியின் மகனுக்கு ‘சிறந்த அறிமுக குழந்தை நட்சத்திரம்’ என்கிற பட்டியலில் உயரிய விருதுகளில் ஒன்றான எடிசன் அவார்டு, வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த புகைப்படத்தினை மகிழ்ச்சியுடன் ஜெயம் ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜெயம் ரவியின் மகன் ஆரவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.