அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள ‘தடம்’ மார்ச்1ல் வெளியாகிறது

யக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படமான  ‘தடம்’ மார்ச்1ல் வெளியாகிறது.

ஏற்கனவே ‘குற்றம் 23 ‘ படத்தின் மூலம் தனி ஹீரோவாக  ஆவர்த்தனம் செய்த நடிகர் அருண் விஜய், ஓரிரு நாளில் வெளியாகி உள்ள தடம் படத்தை பெரிதும் நம்பி உள்ளார்.

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில்,அருண் விஜய் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக  தன்யா ஹோப், வித்யா ப்ரதீப், சோனியா அகர்வால், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள்,  ‘யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த படத்தின் ரன்னிங் டைம் சரியாக 138 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் 18 நிமிடங்கள் என தெரிய வந்துள்ளது. படம் வரும் மார்ச் 1ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'THADAM' Movie, acted in two roles, Arun Vijay, release on March-1, அருண் விஜய், இயக்குனர் மகிழ்திருமேனி, தடம்
-=-