டில்லி:

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் படித்து வந்த தமிழக மாணவர் மர்மமாக மரணடைந்தார்.

திருப்பூரை சேர்ந்த சரத் பிரபு என்பவர், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்எஸ் படித்து வந்தார். அங்கு, இன்று காலை கழிவறையில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவரது உடலைக் கண்ட சக மாணவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த காவலர்கள், சரத்பிரபு உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பொது மருத்துவ படிப்பில் எம்.டி., படித்த திருப்பூரை சேர்ந்த டாக்டர் சரவணனும் மர்மமான முறையில் இறந்தார். அவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.