இன்று (ஜூன் 22) நடிகர் விஜய்யின் 42வது பிறந்தநாள். வழக்கமாக தனது பிறந்தநாள் அன்று, தான் பிறந்த எழும்பூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் பரிசளிப்பார். தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
ஆனால் கடந்த சில வருடங்களாக பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடுவதில்லை விஜய்.
இந்த வருடமும் அப்படித்தான். தனது 60வது படத்தின் படப்பிடிப்பின் இடையே எளிமையாக பிறந்தநாளை கொண்டாடினார்.
படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் பரதன், மற்றும் நடிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டினார். அனைவருக்கும் கேக்கை ஊட்டினார். அவ்வளவுதான்.
குடும்பத்தினருக்காக நேற்று இரவே மனைவி, மகன்களுன் வீட்டிலும் கேக் வெட்டினாராம் விஜய்.