சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டிராக்கை, இயக்குநர் ஷங்கர் நேற்று வெளியிடப்பட்டது.
“ரஜினிமுருகன்” படத்துக்குப் பின் சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சுமார் 45 கோடி ரூபாய் செலவில்  24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.
23-1466699501-remo
நர்ஸ் வேடம் உட்பட 3 வேடங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.
விக்ரம் பல்வேறு தோற்றங்களில் மிரட்டிய அந்நியன் படத்தில் இடம்பெற்ற ரெமோ கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. அந்தக் கதாபாத்திரத்தின் பெயரையே  இந்த படத்திற்கு வைத்துவிட்டனர். ஆகவே, அந்நியன் படத்தை இயக்கிய ஷங்கரை வைத்தே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடலை வெளியிட்டிருக்கிறார்கள்.