ன்று (ஜூன் 22) நடிகர் விஜய்யின் 42வது பிறந்தநாள். வழக்கமாக தனது பிறந்தநாள் அன்று,  தான் பிறந்த எழும்பூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் பரிசளிப்பார்.  தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
22-1466566655-vijay-birhtday-s--600
ஆனால் கடந்த சில வருடங்களாக பிறந்த நாளை  விமரிசையாக கொண்டாடுவதில்லை விஜய்.
இந்த வருடமும் அப்படித்தான். தனது 60வது படத்தின் படப்பிடிப்பின் இடையே  எளிமையாக பிறந்தநாளை கொண்டாடினார்.
22-1466566660-vijay-birthday-6600
படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ்,  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் பரதன், மற்றும் நடிகர்கள்  முன்னிலையில் கேக் வெட்டினார். அனைவருக்கும் கேக்கை ஊட்டினார். அவ்வளவுதான்.
குடும்பத்தினருக்காக நேற்று இரவே மனைவி, மகன்களுன் வீட்டிலும் கேக் வெட்டினாராம் விஜய்.