சென்னை: மே மாதம் 1ந் தேதி தொழிலாளர் தினம் விடுமுறை நாளாக உள்ளதால், நாளைய மெட்ரோ ரயில் சேவை (வெள்ளிக்கிழமை) விடுமுறை நாளான ஞாயிறு தினத்தை போல இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மே தினத்தை (தொழிலாளர் தினம்) முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும். காலை 5 மணி முதல் 12 மணி வரையும் இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மெட்ரோ ரயில் சேவை காலை 05:00 மணி முதல் இரவு 23:00 மணி வரை பின்வரும் கால இடைவெளியில் இயக்கப்படும்:

அதிகபட்ச பயண நேரம் (12:00 மணி – 20:00 மணி) இடைவெளி: ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

அதிகபட்ச பயண நேரம் அல்லாத நேரம் (05:00 மணி – 12:00 மணி & 20:00 மணி – 22:00 மணி)

இடைவெளி: ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

அதிகபட்ச பயண நேரம் அல்லாத நீட்டிக்கப்பட்ட நேரம் (22:00 மணி – 23:00 மணி) இடைவெளி: ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

பயணிகள் தங்களது பயணத்தை அதற்கேற்ப திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]