சென்னை: நடப்பு ஆண்டு (2026 ) எல்நினோ ஆண்டாக இருப்பதால் நாடு முழுவதும் வெப்பம் அதிகரிக்கும்;பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றுசென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் முனைவர் வி.ஆர்.துரை கூறி உள்ளார்.

எல் நினோ (El Niño) என்பது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக வெப்பமடைவதால் ஏற்படும் ஒரு இயற்கை காலநிலை நிகழ்வாகும். இது பொதுவாக 2-7 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றி, உலகம் முழுவதும் வானிலை முறைகளை மாற்றி, கடுமையான வறட்சி, அதிக மழை மற்றும் வெள்ளப் பெருக்கு போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. நடப்பாண்டு இந்தியாவில் எல்நினோ ஆண்டாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, , உலக வெப்பநிலையில் உயர்வு, மற்றும் இந்தியாவில் பருவமழை குறைவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் இதன் பாதிப்பு பல மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது இந்தியாவில் எல்நினோ நிலவுவதால், இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மண்டல வானிலை ஆய்வு இயக்குநர் முனைவர் வி.ஆர்.துரை, தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம், உள்மாவட்டங்களில் உயரும் என்றவர்,
“தமிழகத்தில் ஏப்ரல் மாத மத்தியில் இருந்து வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது, மே மாதம் முழுவதும் தொடர்ந்து உச்சநிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றவர், தினசரி அடிப்படையில் பார்த்தால், காலை 10 மணி முதல் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெப்பம் மிக அதிகமாக இருக்கும் அதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வ தவிர்ப்பது நல்லது . முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார்..
மேலும் வெயிலின் தாக்கமானது மாநிலத்தின் உள் மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், மதுரை போன்ற இடங்களில் 40 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
கடலோர பகுதிகளில், குறிப்பாக சென்னை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வெப்பத்துடன் சேர்ந்து அதிக ஈரப்பதமும் காணப்படுவதால் மக்களுக்கு அதிக அசவுகரியம் ஏற்படக்கூடும்.
இந்த சூழ்நிலையில், பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மே மாதம் கோடை வெப்பம் உச்சமாக இருக்கும் என்பதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றவர், புவி வெப்பமயமாதல் பார்க்கப்படுகிறது. தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் எரிபொருள் பயன்பாட்டின் மூலம் வெளியிடப்படும் மாசுகள் வளிமண்டலத்தில் வெப்பத்தை அதிகமாக தக்கவைத்துக் கொள்கின்றன.
அதோடு, காடுகள் அழிவு காரணமாக மரங்களின் எண்ணிக்கை குறைந்து, இயற்கையான குளிர்ச்சி குறைகிறது.
நகரமயமாதல் அதிகரிப்பதால் காங்கிரீட் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வெப்பத்தை உறிஞ்சி நகர்ப்புற வெப்பத் தீவை (Urban Heat Island effect) உருவாக்குகின்றன.
மேலும், கடல் வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் எல்நினோ போன்ற காலநிலை மாற்றமும் கோடை வெப்பத்தை அதிகரிக்கச் செய்கின்றன.
இந்த காரணிகளாலும் கடந்த சில ஆண்டுகளில் வெப்ப அலை நாட்கள் அதிகமாகவும், வெப்பத்தின் தீவிரம் அதிகமாகவும் காணப்படுகிறது.
நடப்பாண்டில் எல்நினோ வரும் ஜூன், ஜூலை மாதம் வருகிறது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். இந்தியாவின் மேற்பரப்பில் வளிமண்டலத்தில் உள்ள காற்று மேகம் இல்லாத நிலையில் நேரடியாக பூமியில் விழுவதால் வெப்ப பாதிப்பு அதிகமாக இருக்கும். உள்மாவட்டங்களில் வெப்பம் மேலும் அதிகமாக இருக்கும்.
வெப்பநிலை அதிகமாகும் போது வெப்பச் சலனம் காரணமாக மழையும் பெய்யும். மழையால் வெய்யில் சற்று குறையும்.
கோடை காலத்தில் வெப்ப அலை அதிகரிக்கும் சூழ்நிலையில், உடல் வெப்பநிலை பாதித்து, தாகம் அதிகரிப்பு, உடல் சோர்வு, தலைசுற்றல் மற்றும் வெப்பக் கோளாறு போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
[youtube-feed feed=1]