கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 11 மணி நிலவரப்படி 39.97% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய்ம தெரிவித்துள்ளது.

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல் கட்டமாக 152 இடங்களுக்கு கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வரலாறு காணாத அளவில் 93.19 சதவீத ஓட்டுப்பதிவாகி இருந்தது. அதனை தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் எஞ்சிய 142 தொகுதிகளுக்கான 2-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலானது வடக்கு 24 பர்கானாஸ் (33 தொகுதி) , தெற்கு 24 பர்கானாஸ் (31) , ஹவுரா (16) நாடியா (17), ஹூக்ளி (18) பூர்பா பர்தமான் (16) கொல்கத்தா (11) ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வகின்றனர்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக 41,001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இணைய ஒளிபரப்பு மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகின்றன.
மொத்தம் 2,321 மத்தியப் படை நிறுவனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன, இவற்றில் அதிகபட்ச படைகள் கொல்கத்தாவில் குவிக்கப்பட்டுள்ளன. முக்கியப் பகுதிகளைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். அதே நேரத்தில் இந்த செயல்முறையை மேற்பார்வையிட 142 பொதுப் பார்வையாளர்கள், 95 காவல் துறைப் பார்வையாளர்கள் மற்றும் 100 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி வாக்குப்பதிவை முடிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 39.97 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]