சென்னை: தமிழ்நாட்டில் மே 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, புதிய அரசு அமைய உள்ளதால், மே 2ந்தேதி முதல்  காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் உள்பட உயர் அதிகாரிகள் வரை எவருக்கும்  விடுமுறை கிடையாது என தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. மேற்குவங்கத்தில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 5 மாநிலங்களிலும் மே 4ந்தேதி  வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதன் காரணமாக, காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது – தமிழ்நாடு டிஜிபி  அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில், பரபரப்பான சூழலில் மே 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 23ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவானது வரலாறு காணாத அளவுக்கு  85 சதவீதம் பதிவாகி நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.  இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, அனைவராலும் உற்று நோக்கப்படும் தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்  மே 2-ந்தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது என தமிழ்நாடு டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு என முறையான காரணங்களுக்காக விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் விலக்க அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]