சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் படத்தை பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை சிவில் நீதிமன்றம், அன்புமணிக்கு தடை போட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் முடிவடைந்து நாளை (23ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல 21ந்தேதி மாலை இந்த உத்தரவு வெளியிடப்படடுள்ளது, தேர்தலில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, கட்சியை ராமதாஸ் மகன் அன்புமணி கைப்பற்றி உள்ளார். இதனால், விரக்தியில் உள்ள ராமதாஸ் பெயரையும் படத்தையும் கொடியையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்ததார்.
இந்த மனுவின் மீதான விசாரணை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ராமதாஸ் தொடர்ந்த இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து சென்னை 13 வது உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அன்புமணி ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும் தனக்கும் அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பாமக தலைவராக சட்ட விரோதமாக அன்புமணி ராமதாஸ் நீடித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் பிரசாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும் பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்புமணி தரப்பினர், பாமக நிறுவனர் ராமதாஸ் பெயரையும் படங்களையும் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்ட்டார்.
[youtube-feed feed=1]