சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி,  திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் வார் ரூம் அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து  இந்திய தேர்தல் ஆணையம்  மார்ச் 15ந்தேதி தேர்தல் தேதியை வெளியிட்டது. அதன்படி, நாளை (ஏப்ரல் 23) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  தமிழகத்தில் தேர்தல் வன்முறை குறைவு என்பதால், எப்போதும்போல்  ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்குப்பதிவுக் கான   ஏற்பாடுகளை  தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

ஆளும் கட்சியான தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கூட்டணி பலத்தை அதிகரித்துள்ளதுடன், மக்களை கவரும் வகையில், மகளிர் உரிமை தொகை  உள்பட  மேலும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை  வெளியிட்டுள்ளது. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கி உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி  எப்போதும்போல தனித்து களமிறங்குவதுடன், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.  தவெக தலைவர் விஜய் கட்சியும் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கி உள்ளது. இதனால் 4 முனை போட்டி நிலவுகிறது.

இநத நிலையில்,  தி.மு.க. சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க 080694 46900 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது

[youtube-feed feed=1]