சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் 01.05.2026 (மே 1ந்தேதி) முதல் “சிங்கார சென்னை அட்டை மட்டுமே செயல்படும் என்றும், பயண அட்டை பயன்பாடு தடை செய்யப்படுவதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை (Travel Card) பயன்பாட்டிலிருந்து முழுமையாக சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பழைய பயண அட்டையில் மீதமுள்ள தொகையை மாற்றுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதில் மெட்ரோ ரயிலின் பங்கு பெருமளவில் உள்ளது. இதனால், மக்களிடையே மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது. வருகிறது. இதனையடுத்து சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை பயன்பாட்டிலிருந்து முழுமையாக சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கார சென்னை பயண அட்டை
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில்களில் பயணிக்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் “சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது போக்குவரத்து அட்டை)” அறிமுகப்படுத்தியது. இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, இந்தியா முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில், 01.05.2026 முதல் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் “சிங்கார சென்னை அட்டைக்கு (தேசிய பொது போக்குவரத்து அட்டை)” முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது.
பழைய பயண அட்டை தொகை மாற்றம் செய்து கொள்ளுங்கள்
எனவே, மெட்ரோ இரயில்களில் பயணம் செய்யவும், மெட்ரோ வாகன நிறுத்தங்களை பயன்படுத்தவும், பயணிகள் தங்களது பழைய பயண அட்டையில் மீதமுள்ள தொகையை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி (Mobile App) மூலம் பெறப்படும் QR Stored Value Pass (SVP) அல்லது மாற்றிக்கொள்ளுமாறு தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, நம்பகமான பயண அனுபவத்தை வழங்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உறுதியுடன் உள்ளது. இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம். உங்கள் மேலான ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]