சென்னை: நாகை துறைமுகத்திலிருந்து-இலங்கை காங்கேசன்துறைமுகத்துக்கு மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடங்கி உள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை கடந்த சில ஆண்டுகளாக தொடங்குவதும், பின்னர் பயணிகள் கூட்டம் இல்லாததால், அதை நிறுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2024 நவம்பர் மாதம் 18 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு நடந்து வந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து வானிலை மாற்றம் காரணமாக நிறுத்தப்பட்டது
இதைத்தொடர்ந்து 2025ம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் பயணிகளிடையே ஆதரவு இல்லாததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடங்கி உள்ளது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இடையே சுபம் நிறுவனம் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையை நடத்தி வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக நவம்பா் மாதம் நிறுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்து ஜனவரியில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, மாா்ச் 6-ஆம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்ற அறிவிப்பின்படி கப்பல் வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டு சென்றது.
கப்பல் போக்குவரத்தை சுபம் கப்பல் நிறுவன இயக்குநா் சுந்தர்ராஜன் தொடங்கிவைத்தாா். 77 பயணிகளுடன் கப்பல் இலங்கைக்கு சென்றது.முன்னதாக கப்பலில் செல்லும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே கப்பலில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த கப்பல் வாரத்தில் 6 நாள்கள் (செவ்வாய்க்கிழமை தவிா்த்து) நாகை-காங்கேசன்துறை இடையே இரு மாா்க்கத்தில் இயக்கப்படுகிறது. 250 பயணிகள் பயணிக்கும் புதிய கப்பல் மாா்ச் 20-ஆம் தேதி நாகை துறைமுகத்துக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
நாளே நாளில் ரத்து: நாகை – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்துக்கு விடுமுறை….
நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை…
[youtube-feed feed=1]