சென்னை

சென்னை காசிமேடு மீனவர்கள் மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணமாக மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை.

நாளை வங்கக்கடலில் உருவாகும் மிக்ஜம் புயல், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கி வந்து, 5- ஆம் தேதி  நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.

மேலும் புயல் சின்னம் காரணமாக வங்கக்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் மீனவர்கள் கரை திரும்பும்படி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 730-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லாமல் காசிமேடு மீன்பிடி துறைமுக ம் வார்ப்பு பகுதியில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருக்கும் 12 விசைப்படகுகள் உடனடியாக கரை திரும்பவும், 40 விசைப்படகுகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுகத்துக்குச் செல்லவும் மீனவர்களுக்கு மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தவிர முன்னெச்சரிக்கையாக கடலில் இருந்து நூற்றுக்கணக்கான பைபர் படகுகளை ராட்சத கிரேன் மூலம் தூக்கிச்சென்று பாதுகாப்பான இடங்களில் மீனவர்கள் பத்திரமாக வைத்துள்ளனர்.