சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின்.11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் நாளை உருவாகும் மிக்ஜம் புயல், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கி வந்து, 5-ந்தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தவிர ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, தேனி, புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.