பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
அஜித் நடித்த வாலி, முகவரி, ரெட், சிட்டிசன் உள்ளிட்ட 9 படங்களை தயாரித்துள்ளார் சக்கரவர்த்தி.
திரையுலகில் அஜித் ரீ-என்ட்ரி கொடுத்த வரலாறு உள்ளிட்ட மொத்தம் 15 படங்களை இவர் தயாரித்துள்ளார்.
கடைசியாக சிம்பு நடித்த வாலு திரைப்படத்தை தயாரித்த இவர் சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் சீரிசில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.
Rip ..nic arts chakravarthi sir…
🙏 Prayers..புற்றுநோயால் 8 மாத காலம் அவதியுற்றவர் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்..#nicartschakravarthi pic.twitter.com/HE4Tze86KZ— Kavitha journalist (@kavithareporter) April 29, 2023
கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று மரணமடைந்தார்.