மும்பை: 2047க்குள் இந்தியாவை ஷரியாவுக்கு இணங்க இஸ்லாமிய நாடாக மாற்ற PFI விரும்புகிறது என மகாராஷ்டிர ஏடிஎஸ் (Maharashtra Anti-Terrorist Squad (ATS)) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்து உள்ளது. அதாவத, கலப்பு திருமணம் (லவ்ஜிகாத்) மூலம் இஸ்லாமிய சமூகத்தை பெருக்க திட்டமிட்டு வந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 27ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அதன் 8 துணை அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் நகரில் இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம் (சிமி) கடந்த 1977-ல் தொடங்கப்பட்டது. இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கமாக இருந்தது. இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த இந்த அமைப்பை, 2001-ம் ஆண்டில் மத்திய அரசு தடை செய்தது.
இந்நிலையில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சிமி அமைப்பின் மறு அவதாரம் என்றழைக்கப்பட்ட பிஎஃப்ஐ அமைப்புக்கு 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன.
பல்வேறு கலவரங்கள், போராட்டங்கள், படுகொலைச் சம்பவங்களில் பிஎஃப்ஐ அமைப்பின் நிர்வாகிகளுக்குத் தொடர்பு இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 45 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள், அந்தந்த மாநில போலீஸாருடன் இணைந்து 2-வது முறையாக நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில் 247 பேரைப் பிடித்து, விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள், ஆவணங்கள் கிடைத்த நிலையில், அந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், முப்பையில் பிஎஃப் அமைப்பை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்ததாக வழக்கில் மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படை (ATS) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில், மகாராஷ்டிர ஏடிஎஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், “கைது செய்யப்பட்ட 5 பேரும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் மதரஸாவின் மற்ற நிர்வாகிகளுடன் சேர்ந்து, இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வருவதன் மூலம் இந்தியாவில் ஷரியா சட்டத்தை திணிக்க சதி செய்தனர்.
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற பிஎப்ஐ திட்டமிட்டு இருந்ததாக மும்பை நீதிமன்றத்தில் பயங்கர தடுப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலப்பு திருமணம் (லவ்ஜிகாத்) மூலம் இஸ்லாமிய சமூகத்தை பெருக்க பிஎப்ஐ திட்டம் தீட்டி செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டது என்றும் கூறியுள்ளது.
பிஎப்ஐ அமைப்பின் மீதான விசாரணையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் 600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், “வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற பிஎப்ஐ திட்டமிட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2047ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதற்குள் இஸ்லாமிய நாடாக மாற்றி, ஷிரியா சட்டத்தின் படி ஆட்சி நடத்துவதற்கு தேவையான பணிகளை பிஎப்ஐ அமைப்பு முன்னெடுத்தக் கொண்டு இருந்ததாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்திற்காக இஸ்லாமிய இளைஞர்களுக்கு பிஎப்ஐ அமைப்பு தொடர் பயிற்சி அளித்து வந்ததாகவும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்ட இந்தியா மாணவர்களின் இஸ்லாமிய இயக்கத்தை போல், பிஎப்ஐ அமைப்பும் பயங்கரவாத செயல்களுக்கு சதித் திட்டம் தீட்டியதாக அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த சில மாதங்களாக, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், இந்து சமூகத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் செய்து வைப்பது தொடர்பாகன் இந்த அமைப்பினர் பேசி வந்ததாகவும், இதன் மூலம் நாட்டில் இஸ்லாமிய சமூகத்தை அதிகரிக்கும் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.