தோனி எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் (DEPL) நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் முதல் படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
தமிழில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு Let’s Get Married – LGM என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
இதுகுறித்த அறிவிப்பை DEPL நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க லவ் டுடே புகழ் இவானா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
தோனியும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து துவங்கியிருக்கும் இந்த நிறுவனத்தின் மூலம் குறைந்த பட்ஜெட் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.
தமிழைத் தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களைத் தயாரிக்க முடிவெடுத்துள்ளனர்.