உலகநாயகன் கமல் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
தமிழக முதல்வர் மற்றும் கலையுலகை சேர்ந்தவர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இவருக்கு ஏ.வி.எம். நிறுவனம் சார்பில் அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருணா குகன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
1960 ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசனை தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்து வைத்த நிறுவனம் ஏ.வி.எம்.
Wishing engal veetu pillai @ikamalhaasan sir a very happy birthday today! ✨#KamalHaasan #HBDKamalHaasan #Birthday pic.twitter.com/DieGJwIN3j
— Aruna Guhan (@arunaguhan_) November 7, 2022
களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் 6 வயது சிறுவனாக அறிமுகமான கமல் 62 ஆண்டுகளாக ஏ.வி.எம்.மின் பேர் சொல்லும் பிள்ளையாக இருந்து வருகிறார்.
“எங்கள் வீட்டு பிள்ளை கமல் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அருணா குகன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.