லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் ஜூன் 3 ம் தேதி வெளியான படம் விக்ரம்.

கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

போதை மருந்து, கொள்ளை, கடத்தல் என்று ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பல திருப்பங்களுடன் சண்டைக்காட்சிகள் நிறைந்த இந்த படம் கமல் ரசிகர்களிடம் மட்டுமன்றி தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ்நாட்டில் சமீபகாலமாக மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட படம் வசூலை வாரிக்குவித்த நிலையில் அதை முறியடித்துள்ளது விக்ரம்.

18 நாட்களில் ரூ. 160 கோடிக்கும் மேல் வசூலித்து கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசூல் சாதனையில் முதலிடத்தில் இருந்த பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

இந்திய அளவில் மொத்தம் 265 கோடி ரூபாயும் வெளிநாடுகளில் ரூ. 115 கோடி என மொத்தம் 380 கோடி ரூபாய் இதுவரை வசூலானதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முந்தைய பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடித்துள்ள கமலின் விக்ரம் திரைப்படம் 3 வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.