சென்னை: போலிப்பத்திரம் ரத்து செய்வது தொடர்பான சட்ட திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
பத்திரப்பதிவுத்துறையில் போலி பத்திரங்களை துறைத்தலைவரே நேரடியாக ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் வகையில் புதிய சட்ட முன்வடிவு ஆகஸ்டு 27ந்தேதி நடைபெற்ற பதிவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தைத் தொடர்ந்து, அமைச்சர் மூர்த்தியால் ட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா இன்று (செப்டம்பர் 2ந்தேதி) நிறைவேற்றப்பட்டது. இன்று சட்டபேரவையில் குறு – சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை,மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்டவைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதையடுத்து, தமிழகத்தில் போலி பத்திரத்தை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதா சட்டப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்மூலம், யாரேனும் போலி பத்திரத்தை பதிவு செய்திருந்தால் அதை பத்திரப்பதிவு தலைவரே நீக்கம் செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக,போலி பத்திரத்தை ரத்து செய்ய நீதிமன்றம் சென்று மட்டுமே ரத்து செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது,இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, அதை பத்திரப்பதிவு தலைவரே நீக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.