அடையாறு, தரமணி, தாம்பரம் உள்பட முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை!

Must read

சென்னை: சென்னையில் நாளை, அடையாறு, தரமணி. தாம்பரம் உள்பட முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.  பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை  மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக  நாளை (03.09.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.  காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை  மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவித்து உள்ளது.

தாம்பரம் பகுதி: கோயிலம்பாக்கம் – வீராமனி நகர், மணிகண்டன் நகர், ரோஸ் நகர், பாலமுருகன் நகர் ராணி மகால், எம்.ஜி.ஆர் நகர் ராஜகீழ்ப்பாக்கம் – வேணுகோபால் தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, வேளச்சேரி மெயின் ரோடு, மேத்தா நகர், ஸ்ரீராம் நகர், கணேஷ் நகர் ராதாநகர் – சாந்தி நகர் 1 மற்றும் 2 வது தெரு, கல்லூரி ரோடு, லட்சுமி நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

தரமணி மற்றும் துரைப்பாக்கம் பகுதி: தரமணி ஓ எம் ரோடு ஒரு பகுதி, சர்ச் மெயின் ரோடு, குறிஞ்சி நகர், சர்ச் ரோடு, சி.பி.ஐ காலனி மெயின் ரோடு, அப்போலோ மருத்துவமனை துரைப்பாக்கம் சத்தி கார்டன், மாதா கோயில் தெரு, ஓ.எம்.ஆர், பிருந்தவன் கார்டன், பிரபான்ஜன் அப்பார்ட்மென்ட்ஸ் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

அடையார் பகுதி; காந்தி நகர் தெற்கு லக் தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, பாண்டி தெரு, நாயுடு தெரு, துலுகானத்தம்மன் தெரு, புது தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு ஈஞ்சம்பாக்கம் ஸ்பார்க்லிங் சான்ட் அவென்யூ, எல்.ஜி.அவென்யூ, ஸ்பிரிங் கார்டன் 1, 2வது தெரு, ஈ சி ஆர் ஒரு பகுதி, காப்பர் பீச் சாலை மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மேற்கண்ட பகுதிகளில்  மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

More articles

Latest article