சென்னை: தமிழ்நாட்டில் 7ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை தரும் 4 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும் உள்பட 18 புதிய  அறிவிப்புகளை  சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம்  13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில்,  மானிய  கோரிக்கைகள்  மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன.  இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன.

இன்று நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களைத் தொடர்ந்து, ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 18 அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, தமிழ்நாடு சிட்கோ மூலம் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சீரான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை, திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரம், செங்கல்பட்டு மாவட்டம் கோட்டூர் மற்றும் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஆகிய நான்கு இடங்களில் மொத்தம் 394 ஏக்கர் பரப்பில் 218. 22 கோடி மொத்த திட்ட மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் இதன் மூலம் சுமார் 7000 ஆயிரம் நபர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெற தேவையான கல்வித் தகுதியை பன்னிரண்டாம் வகுப்பு என தளர்த்தியும், தனி நபர் முதலீடு 50 லட்சத்தில் இருந்து 75 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பட்டியல் இனம், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தொழில் முனைவோருக்கு 10 விழுக்காடு கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு சிட்கோ மூலம் செங்கல்பட்டு மாவட்டம் கடம்பாடியில் 19 ஏக்கரில் 23 கோடி திட்ட மதிப்பீட்டில் சிற்பக் கலைஞர்களின் மேம்பாட்டிற்காக சிற்ப கலைஞர் தொழில் பூங்கா சுமார் 1000 சிற்ப கலைஞர்கள் மற்றும் இதர நபர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்படும்.

கொசிமா மூலம் கோயம்புத்தூர் மாவட்டம் செல்லப்பம்பாளையம் கிராமத்தில் 40.42 ஏக்கரில் 18.13 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 9.6 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு மானியத்துடன் புதிய தனியார் தொழிற்பேட்டை அமைக்க அதன் மூலம் ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம் கிட்டம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா கூற்று தொழில்பேட்டையில் நேரடியாக பத்தாயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்க ஏதுவாக சங்க உறுப்பினர்களின் நிதி பங்களிப்புடன் 17.50 கோடி திட்ட மதிப்பீட்டில் 585 குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பாட்டிற்காக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 10 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் நபார்டு வங்கி ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் திட்டத்தின் உதவியுடன் 50.06 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.

தாய்கோ வங்கி கிளைகளில் வணிக வலிமையை அதிகரிக்கும் பொருட்டு ஐந்து கிளைகளில் கரோட்டோ மீட்டர் நிறுவுவதற்கு வாடிக்கையாளர் வசதிக்காக 4 கிளைகளை நவீனமயமாக்கம் 82 லட்சம் செலவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாநிலத்தில் நடைபெற்று வரும் பாரம்பரிய குறு மற்றும் சிறு தோழிகளான உப்பு உற்பத்தி வெள்ளி கொலுசு வெள்ளி விளக்கு தயாரித்தல் கலைப் பொருட்கள் மற்றும் பொருட்கள் உற்பத்தி பூட்டு உற்பத்தி மற்றும் பட்டு சார்ந்த தொழில்கள் ஆகியவை சிறப்பு தொழில்கள் வகையில் கீழ் கொண்டு வரப்பட்டு சிறப்பு முதலீட்டு மானியம் வழங்கப்படும்.

சேகோசர்வ் நிறுவனத்தின் 4 கிடங்குகள் பணிகளை எளிதாக கையாளுவதற்கு 45.5 கோடி செலவில் இயந்திர மக்கள் மற்றும் விரிவுபடுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சிறு குறு மற்றும் நடுத்தர உற்பத்தித் தொழில்கள் நிறுவனங்கள் தங்களின் தரத்தை மேம்படுத்த அவை கொள்முதல் செய்யும் உயர்நிலை விலை கொண்ட அளவீடு மற்றும் சோதனை கருவிகளில் செய்யப்படும் முதலீடு மானியம் கணக்கிட தகுதியானதாக சேர்க்கப்பட்டு முதலீட்டு மானியம் வழங்கப்படும்.

பொது உற்பத்தி கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் மதுக்கரை மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆகிய 3 இடங்களில் அமையப் பெறும் குடும்பங்களுக்கு ஆக மொத்தம் 12 கோடியே 81 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 7.5 கோடி தமிழ்நாடு அரசு மானியத்துடன் பொது உற்பத்தி கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் இதன் மூலம் 150 குறுந்தொழில் முனைவோர் பயன்பெறுவர்.

தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில்களை ஆதரிக்கும் வகையில் தமிழ்நாடு புத்தாக்க ஆதார மானிய ( டான்சீட் ) திட்டத்தின் மூலம் 50 புத்தொழில்களுக்கு மானியமாக தலா 10 லட்சம் வழங்கப்படும்.

ஆர்வம் உள்ள அனைத்து தொழில் முனைவோருக்கும் இணைய வழியில் எளிதில் பயிற்சிகளை வழங்குவதற்கு ஏதுவாக EDII நிறுவனத்தில் பயிற்சி திட்டங்கள் ஒரு கோடி மதிப்பில் இணைய மயமாக்கப்படும்.

டான்சி நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சந்தைப்படுத்த ஒரு பிரத்தியோக காட்சியகம் மற்றும் மின் வணிக இணைய முகப்பு ஆகிய 3 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

மாவட்ட தொழில் மைய அலுவலகங்களுக்கு பழுதடைந்த பழைய நான்கு சக்கர வாகனங்களுக்கு பதிலாக வருவாய் 60 லட்சம் செலவில் 8 புதிய ஈப்புகள் (ஜீப்)கொள்முதல் செய்யப்படும்.

தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படைத்தன்மை விதிகள் 2000ல் குறு மற்றும் சிறு தொழில்கள் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள 25 விழுக்காடு வரையிலான கொள்முதல் முன்னுரிமையை கண்காணிக்க புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கொள்முதல் வலைதளத்தில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தொழில் முனைவோருக்கு (Term Loan) கால கடன் மற்றும் நடைமுறை மூலதன கடன் ( Working Capital Loan )தாய்க்கோ வங்கியில் இருந்து எளிதில் கிடைத்திடும் வகையில் தாய்கோ வங்கி மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்

இவ்வாறு கூறினார்.