சென்னை: தமிழ்நாட்டில் இந்திய மருத்துவமுறைகள் மூலம் 27,466 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் இல்லை என தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை தொற்று பரவல் சற்றே கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும் கொரோனா 3வது அலை பரவ வாய்ப்பு உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. கொரோனா தொற்று பவலை தடுக்க ஆயுஷ் மருத்துவ மருந்துகளும் பெரும் பங்காற்றின. சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, இயற்கை வைத்தியம் போன்றவற்றாலும் பல கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று, தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகஅரசும் பல பகுதிகளில் ஆயுஷ் கோவிட் கேட் சென்டர் அமைத்துள்ளது.
இந்த நிலையில், அரசின் சித்த மருந்துதயாரிப்பு நிறுவனமான ‘இம்ப்காப்ஸ்’சார்பில் துரைப்பாக்கத்தில் கோவிட் கேர் சென்டர் அமைக்கப்பட்டு உள்ளது. இதை தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழ்நாட்டில் சித்தா, ஆயுர்வேதா போன்ற இந்திய மருத்துவமுறைகள் மூலம் கொரோனாவிலிருந்து 27,466 பேர் மீண்டுள்ளனர்; ஒரு உயிரிழப்பு கூட இல்லை.. என்று கூறினார்.