மதுரை: மதுரையில் இன்று காலை  மாணவிகள் சென்ற கல்லூரி பேருந்துக்குள் நுழைந்து போதை ஆசாமி  பேருந்து ஓட்டுனரை தாக்கி ரகளை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பேருந்துக்குள் இருந்த மாணவிகள் அஞ்சி அலறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை விமான நிலையம் அருகே உள்ள நாகரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவர்கள் இந்த கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் இருந்து 30க்கும் மேற்பட்ட மாணாக்கர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்து  மதுரையை அடுத்த பெருங்குடி, வலையப்பட்டி, பெரிய ஆலங்குளம் விரிசல் குளம் சென்று கொண்டிருந்தது.

இந்த சமயத்தில் அந்த சாலை வழியே,‘  இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. கல்லூரி தொடங்குவதற்கான நேரம் நெருங்கியதால்,  கல்லூரி பேருந்து டிரைவர் சாலையை கடக்க  ஹாரன் அடித்தார். இதனால்,  கோபமடைந்த இறுதி ஊர்வலத்தில் மதுபோதையில்  கலந்து கொண்ட சிலர் பேருந்தின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

மேலும், சிலர் பேருந்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு பேருந்துக்குள் ஏறியதுடன், பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கியனர். இது பேருந்துகள் இருந்த மாணவிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.  இதனை பார்த்து பேருந்துக்குள் இருந்த மாணவிகள் அலறினர்.>இதனை படம்பிடித்த மாணவி ஒருவர் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததுடன் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பேருந்துகள் புகுந்து போதை ஆசாமிகள்  தாக்குதல் நடத்திய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.