இந்த நிலையில்,அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்தியில், எஸ்.பி.பி. உடல்நலம் சீராக இருப்பதாகவும் மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவுதெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு எஸ்.பி.பியின் உடல்நிலை மோசமானதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் அவருக்கு செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.