65 பாடகர்கள் இணைந்து பாடிய ஏ. ஆர். ரகுமான் சூப்பர் ஹிட் பாடல் .. புதிய முயற்சியாக நாளை வெளியாகிறது..

Must read

யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) என்பது பிரபல பின்னனி பாடகர் ஶ்ரீநிவாஸால் உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் . இதில் இவருடன் இனணந்து பாடகர்கள் உன்னிகிருஷ்ணன் , சுஜாதா மோகன் , ராகுல் நம்பியார், ரஞ்சித் கோவிந்த் அறங் காவலர்களாக பொறுப்பேற்கிறார்கள்.


கொரோனா ஊரடங்கு நாளில் வாழ்வாதாரத்திற்காக கஷ்டப்படும் பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்க ளுக்கு நிதி திரட்டி உதவுவதே இந்த அமைப்பின் நோக்கம். எங்கள் அமைப்பின் முதல் முயற்சி “டுகெதர் அஸ் ஒன்”
இசை அமைப்பாளர்ஏ.ஆர்.ரகுமான் மோகன்லால் , மற்றும் யஷ் அவர்கள் ஆகஸ்ட் 15 -ஆம் நாள், காலை 11:00 மணியளவில் 2020 சுதந்திர தினத்தன்று வெளியிடுகிறார்கள். இதை தொடர்ந்து அமைப்பின் நோக்கத்திற்காக மக்களி டையே நிதி உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
பேரிடர் நேரங்களில் ஒற்றுமையை குறிக்கும் வகையில் அமைந்த இந்த பாடல் 28 வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த தமிழா தமிழா என்ற பிரபலமான பாடல். இன்று இந்த பாடலை ஊரடங்கு சமயத்தில் 65 பாடகர்கள் ஒருங்கிணைந்து வீட்டில் இருந்தபடியே ஐந்து மொழிகளில் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி) ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் .
யூ எஸ் சி டி (USCT) செப்டம்பர் மாதத்தில் உலக அளவில் நிதி திரட்டுவதற்காக ஆன்லைனில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்த உள்ளது.

More articles

Latest article