தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், கதாசிரியர் என அனைத்துத் துறைகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன், நேற்று தனுஷுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பதிவில்
“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ் சார். அற்புதமான ஆண்டு வரவிருக்கிறது. உங்களோடு பணிபுரிய ஆவலாக உள்ளேன். விரைவில் யாரேனும் நம் இருவரையும் ஒரே படத்துக்குத் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன்”.
இவ்வாறு மாளவிகா மோகன் தெரிவித்துள்ளார்.


மாளவிகா மோகனனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவருடைய ட்வீட்டுக்கு, “நன்றி… விரைவில் நடக்கும் என நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் தனுஷ்.